கொரோனாவை மிஞ்சிய கருப்பு பூஞ்சை… அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!!!

0

இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளை பாதிக்கும் விதமாக கருப்பு பூஞ்சை நோய் உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் இந்நோயால் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் கருப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை என நான்கு வகையான பூஞ்சை நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்த நோய், புதிய மருத்துவ சவாலாக உருவெடுத்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு வருகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவுள்ளவர்களை இது அதிகம் தாக்குகிறது.

தற்போது சுகாதார துறை வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 729 பேர் இத்தொற்றால் பலியாகியுள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சுமார் 8,000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே குஜராத், பஞ்சாப், தமிழ் நாடு, ஒடிசா, கர்நாடகா,மத்திய பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா குறையும் நிலையில் தற்போது இது மக்களுக்கு மற்றொரு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here