கோழிகள் மூலம் கருப்பு புஞ்சை நோய் பரவுமா ?? மத்திய அரசு அதிரடி

0

இந்தியாவில் தற்போது கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை என்னும் அரியவகை நோயும் பரவி வருகிறது. இந்நோய் கோழிகள் மூலம் பரவும் என சமூக வலைத்தளங்களில் பரவி வந்த கருத்துக்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கருப்பு புஞ்சை:

இந்நிலையில் நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் மேலும் ஓர் கொடிய வகை கருப்பு பூஞ்சை என்னும் நோய் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு தான் கருப்பு பூஞ்சை என்னும் நோய் வேகமாக பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் காணப்படும். முகம் வீங்கி முகத்தில் அதிகமான வலி காணப்படும்.

பார்வை குறைபாடு ஏற்படுவதோடு பார்வை தெளிவாக இல்லாமல் அனைத்தும் இரட்டையாக தெரிவதும் இதற்கான அறிகுறிகள் தான். மேலும் மூக்கில் ரத்தம் கலந்த நீர் வருவது கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவ்வாறு கூறப்பட்டு வந்த நிலையில் கோழிகளின் மூலமும் கருப்பு பூஞ்சை நோய் பரவும் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. தற்போது இதுகுறித்து கோழிகளின் மூலமும் கருப்பு பூஞ்சை நோய் பரவும் என்பதற்கு அதிகார பூர்வமான விளக்கங்கள் இல்லை எனவும் சமூகவலை தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here