சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டம்.,, பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக கைது!!

0
சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டம்.,, பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக கைது!!
சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டம்.,, பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக கைது!!

திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜக கட்சியின் பெண் உறுப்பினர்களான 4 நடிகைகளை இழிவாக பேசியதை எதிர்த்து இன்று பாஜகவினர் சென்னையில் போராட்டம் நடத்தி உள்ளனர்.

பாஜகவினர் போராட்டம்:

சில தினங்களுக்கு முன்பு சென்னை k. k நகரில் திமுக சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜக கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகிய நடிகைகளை மிகவும் தரக்குறைவாக பேசினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதையடுத்து இது குறித்து திமுக எம்.பி கனிமொழி ட்விட்டரில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் சைதை சாதிக்கின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்த நிலையில், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விஜய் டிவியால் பிரபல சீரியலுக்கு வந்த இழப்பு.., 10 வருடங்களுக்கு பிறகு பிரபல நாயகியை களமிறக்கும் சன் டிவி

மேலும் பாஜக கட்சி பெண் உறுப்பினர்களை, திமுக பேச்சாளர் தவறாக பேசியதை எதிர்த்து இன்று சென்னையில், பாஜக மகளிர் அணி சார்பாக போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தை நடத்த போலீசாரிடம் பாஜகவினர் அனுமதி வாங்காத காரணத்தால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானோரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here