PM கிஷான் திட்டத்தில் கூடுதலாக ரூ.3000, பெண்களுக்கு 33% அரசு வேலை.., தேர்தல் வாக்குறுதிகளை பறக்கவிட்ட பாஜக!

0

ஹிமாச்சல பிரசதேசத்தில் நவம்பர் 12 ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தற்போது கட்சிகள் தங்களது வாக்குறுதிகள் பதிவு செய்து வருகின்றனர். பாஜக-வின் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் ஆட்சி காலம் முடிவடைந்து ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அண்மையில் காங்கிரஸ் தங்களின் தேர்தல் வாக்குறுதியை அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாஜக தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்துவது, இளைஞர்களுக்கு அதிகாரத்தை வழங்குவது, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள், அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேற்றுவது, மாநிலத்தில் 5 மருத்துவ கல்லூரிகள், பிரதமந்திரி கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.3000 அதிகரிப்பது என பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தனர். மேலும் அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, இமாச்சலத்தில் உள்ள மக்களுக்கு 8 லட்சம் வேலைகள் அளிக்கப்படும் என்றும் பாஜக உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here