வருடத்திற்கு 3 சிலிண்டர், அரை லிட்டர் பால் இலவசம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
வருடத்திற்கு 3 சிலிண்டர், அரை லிட்டர் பால் இலவசம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
வருடத்திற்கு 3 சிலிண்டர், அரை லிட்டர் பால் இலவசம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு மூன்று சிலிண்டர்களும், 5 கிலோ அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் பண்டிகை மாதங்களில் ஒரு நாளுக்கு அரை லிட்டர் நந்தினி பால் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதுமட்டுமின்றி, விவசாயிகளுக்கு 80 சதவீத மானியத்துடன் கூடிய சோலார் பம்பு செட், பட்டியலின பழங்குடியின பெண்களுக்கு இலவசமாக வைப்பு நிதி சேமிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளும் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள முதியோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை இலவச முழு உடல் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வெளியிட்டுள்ளனர்.

திருமணமான புதுமண தம்பதிகளா நீங்க?? அப்போ மறந்தும் கூட இந்த விஷயத்தை செய்யாதீங்க !!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here