பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கார் மீது தாக்குதல் – கடவுள் அருளால் உயிர் தப்பியதாக பேட்டி!!

0

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வின் பாதுகாப்பு வாகனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர்.

பாதுகாப்பு வாகனம் மீதி தாக்குதல்:

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாகனத்தில் சென்றார். அவரது வாகன அணிவகுப்பு செல்லும் பகுதியில் ஏராளமானோர் சாலையோரம் திரண்டு பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். டயமண்ட் ஹார்பர் பகுதியில் நட்டாவின் வாகனம் கடந்து சென்றபோது, பாஜக தலைவர்களின் வாகனங்களை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மிகப்பெரிய செங்கற்களையும் வீசினர். சாலையை மறித்து பாஜக தலைவர்களை தடுக்கவும் முயன்றனர். இந்த தாக்குதலில் பாஜக தலைவர்களின் வாகனங்கள் சேதமடைந்தன. ஜே.பி.நட்டாவின் கார் மீதும் கற்கள் விழுந்தன. ஆனால் அது குண்டு துளைக்காத கார் என்பதால் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், “நான் பார்த்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியளித்தது.

இதற்கு முன் எப்போதும் நடந்தில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது சட்டம் ஒழுங்கும் இல்லை, சகிப்பின்மையும் இ்ல்லை. மாநிலத்தில் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து, குண்டர்கள் ஆட்சி நடக்கிறது. இந்த தாக்குதலில் எனக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் நான் குண்டு துளைக்காத காரில் பயணித்தேன். ஆனால் பாதுகாவலர்கள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என்றார்.

மேலும் பேசிய அவர் “பாஜகவின் மூத்த தலைவர் ஒருவருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். துர்கா தேவியின் ஆசியால்தான் நான் இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பாக வந்து பேசுகிறேன். மாநிலத்தில் கட்சித் தொண்டர்களை நினைக்கவே மிகவும் கவலையாக உள்ளது. இந்த குண்டர்கள் ஆட்சியை நாம் தோற்கடிப்போம். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் மிகவும் கீழான நிலைக்குச் சென்றுவிட்டது” என்றார் ஜே.பி.நட்டா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here