தமிழகத்தில் 2.3 கோடி பேருக்கு அரசு வேலையா? பாஜக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த PTR!!!

0

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” நடை பயணத்தை மேற்கொண்ட போது, “தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தவுடன், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.” என கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “தமிழகத்தில் குழந்தைகள், ஓய்வு பெற்றவர்கள் என சுமார் 7.6 கோடி மக்கள் உள்ளனர். அதில் 3 ல் ஒருவருக்கு அரசு வேலை என்றால் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்க வேண்டும். ஆனால் தற்போதைய அரசு பணிகள் சுமார் 9.5 லட்சம் தானே உள்ளது.” என அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

’மாயம் இல்லை மந்திரம் இல்லை’.. தலைகீழாக தொங்கிய பெண்..  வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here