இவங்களா நம்ம அஞ்சலி பாப்பா ???…!பிறந்தநாள் போட்டோவை பகிர்ந்த ஷாமிலி…!குவியும் லைக்ஸ்கள்!!!

0

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் அவர்களின் ராஜா நடை படத்தின் மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ஷாமிலி எனப்படும் ஷாமிலி அவர்கள். இவரின் பிறந்த நாள் கடந்த ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்பொழுது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இவரின் இந்த  புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களின் லைக்ஸ்களை அளித்து வருகின்றனர்.

அஞ்சலி படத்தில் மனநலம் பாதித்த ஒரு சிறு குழந்தையாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஷாமிலி அவர்கள். இவர் நடிகையும், நடிகர் அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி அவர்களின் தங்கை ஆவர். குழந்தை நட்சத்திரமாகவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2009ஆம்  ஆண்டு தெலுங்கில் வெளியான ஓய் என்ற படத்தில் சித்தார்த்கு ஜோடியாக முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு ஒரு சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த முதல் படம்  மூலமாக விருதுகளையும் பெற்று உள்ளார். மேலும் இவர் தமிழில் விக்ரம் பிரபு உடன் வீர சிவாஜி என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஜூலை 10ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அதன் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்கள் மற்றும் லைக்ஸ் அளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here