பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் 45 நாட்கள் புழல் சிறையில் இருந்து நேற்று வெளியே வந்த நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கண்டிப்பாக நான் பைக் ஓட்டுவேன். என்னிடம் சர்வதேச லைசென்ஸ் இருக்கிறது என்று பேட்டி கொடுத்தார். இந்நிலையில் அவர் கூறியதற்கு போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதாவது டிடிஎப் வாசன் வாகனம் ஓட்ட முடியாது. உள்நாட்டில் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் ஓட்ட முடியும். விபத்து ஏற்படுத்தியதற்காக லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில் சர்வதேச லைசன்ஸ் உள்நாட்டில் செல்லுபடியாகாது என்று போக்குவரத்து காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது. எனவே டிடிஎப் வாசன் இருசக்கர வாகனம் கண்டிப்பாக 10 ஆண்டுகள் தொட முடியாது என்பது தெரிகிறது.