ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவித்த பீகார் அரசு.. அனைத்து அலுவலங்கலும் வழக்கம் போல் இயங்க அனுமதி… 

0

பீகார் அரசு ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை இன்று (ஜூலை 5, 2021)  அறிவித்துள்ளது. அதில் அலுவலங்கள் வழக்கம் போல இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலை கழகங்கள் 50% மாணவர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கி எடுத்த கொரோனா இரண்டாம் அலையின் பரவல் தற்போது குறைந்து வருவதால் மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை நீடித்து வருகிறது. தற்போது பீகார் அரசும் பல்வேறு வித தளர்வுகளை அறிவித்துள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது ட்விட்டர் வாயிலாக இந்த தளர்வுகளை உறுதிப்படுத்தினார்.

 

பிஹாரில் தற்போது உள்ள ஊரடங்கு ஜூலை 13 வரை நீடிக்கப்படுவதுடன் பின்வரும் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் பீகாரில் வழக்கம் போல செயல்பட அனுமதி.
  • பீகாரில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், அரசு பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் 50 சதவீதம் மாணவர்களுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • உணவகங்கள் மற்றும் உணவகங்கள் 50 சதவீதம் ஒரே சமயத்தில் அமர்ந்து உணவு உட்கொள்ளலாம்.

மேலும் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பீகார் அரசால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here