+2 முடித்தால் ரூ.25,000, பட்டபடிப்பு முடித்தால் ரூ.50,000 – மாநில அரசு அதிரடி!!

0

பீகார் மாநிலத்தில் நேற்று நிதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி முடிக்கும் மாணவிகளுக்கு மாநில அரசு அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது. இதனால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பீகார்:

நேற்று பீகார் சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான அதாவது 2021-22ம் ஆண்டிற்கான நிதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை துணை முதல்வரும் மற்றும் நிதி அமைச்சருமான தார் கிஷோர் பிரசாத் தாக்கல் செய்தார். அதில் மக்களை கவரும் வண்ணத்தில் பல திட்டங்கள் இடம் பிடித்திருந்தது. மேலும் பொறியியல் கல்லூரிகளை துவங்குவதற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு, கால் நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பிற்கு ரூ.500, கோடி ஒதுக்கீடு போன்ற பல திட்டங்கள் இடம் பெற்றிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘கோவை மெட்ரோ முதல் துறை மேம்பாடுகள் நிதி ஒதுக்கீடு வரை’ – இடைக்கால பட்ஜெட் முழு விபரம்!!

தற்போது அந்த வரிசையில் பள்ளி மாணவிகள் அனைவரும் பயனடையும் வகையில் ஓர் திட்டம் கொண்டு வந்துள்ளனர். அது என்னவென்றால், இனி +2 தேர்ச்சி அடைந்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.25,000 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதி மாணவிகள்  குஷியடைந்துள்ளனர். மேலும் தற்போது பீகார் மாநில அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here