கொரோனாவின் மோசமான நிலை இனிமேல் தான் – WHO எச்சரிக்கை!!

0
WHO
WHO

கொரோனா வைரஸுடன் மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும், இனிமேல் தான் அதன் மோசமான நிலையை உலகம் பார்க்கப் போகிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

WHO எச்சரிக்கை:

சீனாவில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் தீவிரமாக பரவியது. ஆறு மாதங்களை கடந்து விட்ட நிலையில் உலகில் 1.05 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இது குறித்து பேசிய WHO இயக்குனர் டெட்ராஸ் அதானம், ஆறு மாதங்களுக்கு முன்வரை உலகம் இப்படி ஒரு வைரசால் பாதிக்கப்படும் என ஒருவரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டர் என கூறினார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

WHO Director
WHO Director

உலக நாடுகள் அடுத்துவரப் போகும் நீண்ட போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என கூறிய அவர், அனைவரும் வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று தற்போதைக்கு முடிவைப் எட்டப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை என கூறினார். கொரோனா வைரஸின் மோசமான நிலை இனிமேல் தான் வரப்போகிறது என எச்சரித்து உள்ளார்.

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி தயார் – 300 பேருக்கு பரிசோதனை!!

மேலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாடான சீனாவில் வைரஸ் குறித்து ஆராய ஒரு குழுவை அனுப்ப உள்ளதாக WHO தெரிவித்து உள்ளது. உலகில் சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதாக பல நாடுகள் குற்றம் சாட்டி உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here