புது படத்தில் கமிட்டான பிக் பாஸ் வனிதா – வைரலாகும் போட்டோஷூட் அலப்பறைகள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜயகுமார் தற்போது வித்தியாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வனிதா

விஜயகுமாரின் மகளாகிய வனிதா ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளில் சிக்கியவர். அதன் பிறகு தனது மகன் ஸ்ரீஹரிக்காக ரோடில் இறங்கி பல போராட்டங்களை செய்து வந்தார். தனது அப்பா மீது பல குற்றசாட்டுகளை எடுத்து வைத்தார். தன்னை இத்தணை நாட்களாக செய்ததாகவும் அதனால் தான அந்த வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பல புகார்களை அடுக்கினார்.

அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதில் தான் அவரது அராஜகம் அனைத்தும் தெரிய வந்தது. வீட்டில் உள்ள அனைவரும் தன் பேச்சை தான் கேட்க வேண்டும் என்று ஆட்டி வைத்தார். இதனால் சில வாரங்கள் கூட அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

அதன் பிறகு தான் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை கைப்பற்றினார். அதன் பிறகு பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்ட பல பிரச்சனைகளை சந்தித்தார். தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டு அதிலிருந்து விலகினார்.

அதற்கு காரணம் கேட்டதற்கு தன்னை பார்த்து பலர் பொறாமை படுவதாக சொல்லி இருந்தார். இந்நிலையில் தான் தற்போது வீட்டில் பூஜை செய்கிறேன் என்ற பெயரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கழுத்தில் ருபாய் தாள்களை கட்டிக்கொண்டு அவர் வெளியிடிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் தனது புது படத்திற்கான பூஜை என்று இன்ஸ்டா பக்கத்தில் பிரபல சீரியல் நடிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here