சன் டிவி சீரியலில் களமிறங்கிய பிக் பாஸ் நடிகர் – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கிய நடிகர் ஒருவர் சன் டிவியில் சுந்தரி சீரியலில் களமிறங்கியுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நடிகர்

பிக் பாஸ் நிகழ்ச்சி 2017 இல் ஆரம்பித்து அப்போது வரை பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் இருந்து தற்போது நடந்து முடிந்த 4வது சீசன் வரை மக்களுக்கு சுவாரசியம் குறையாமல் கொண்டு சென்று வருகிறது.

ஆனால் எத்தனை சீசன் வந்தாலும் பிக் பாஸ் எப்படி இருக்கும் என்றே தெரியாமல் வந்த முதல் சீசன் போட்டியாளர்கள் தான் கெத்து. ஏனெனில் அடுத்தடுத்த சீசனில் வந்தவர்கள் தங்கள் பெயர் கேட்டு விடுமோ என்ற பார்த்து பார்த்து விளையாண்டனர். அந்த முதல் சீசனில் வந்தவர் தான் வையாபுரி.

அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே அஜித், விஜய் உடன் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். தாடி பாலாஜி எந்த அளவிற்கு பிரபலமோ அதே தான் வையாபுரியும்.  இவர் இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு தான் தன் மகள், மனைவியை பற்றியே தெரிந்து கொண்டார். முதலில் யாரையுமே மதிக்க மாட்டாராம்.

அவர்களை எல்லாம் பிரிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை நாட்கள் இருந்ததும் தான் அவர்களின் அருமை தெரிந்தது என்றும் கூறியிருந்தார். அதன் பிறகு சினிமாவில் தலைகாட்டாத இவர் சுந்தரி சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here