
விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இதுவரை 9 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இரண்டாவது முறையாக தினேஷ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து இன்று அதிரடியாக வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களமிறங்க உள்ளனர் என்று முதல் இரண்டு ப்ரோமோவில் தெள்ள தெளிவாக தெரிந்த நிலையில், தற்போது இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதில் இன்று வெளியில் இருந்து உள்ளே வரும் போட்டியாளர்களை தோற்கடித்து வெளியே அனுப்ப பிக்பாஸ் வீட்டார்கள் ஒன்றாக சேர்ந்து திட்டம் போடுகிறார்கள். மேலும் ஐஷு உள்ளே வந்தால் ஓர்த்தாக இருக்கும் என்று நிக்சன் கூற மற்ற போட்டியாளர்கள் திகைத்து பார்க்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.எனவே இன்றைக்கான எபிசொடுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
காரில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்., இறப்பில் மர்மம்., தீவிர விசாரணையில் போலீசார்!!