
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஷோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படி இருக்கையில் கடந்த வாரம் வைல்ட் கார்டு மூலம் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த 5 போட்டியாளர்களை, பிக் பாஸ் விட்டார் ஸ்மால் பாஸ் ஹவுஸ்க்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இதன் 3 ஆவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டார் தங்களை ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பியது தனக்கு பிடிக்கவில்லை என அர்ச்சனா கானா பாலாவிடம் கூறுகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது வைல்ட் கார்டு என்ட்ரியில் நாங்கள் வந்தோம் என்பதற்காக நம்மை சமைக்க சொல்லிவிட்டு அவர்கள் குஷியாக ஆட்டம் போடுவது சரி கிடையாது என கூறுகிறார். அதற்கு பாலா இதுவே நீங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் ஜாலியாக தானே இருந்திருப்பீர்கள் என கேட்கிறார். அதைக்கேட்ட அர்ச்சனா ஆமாம்., எனக்கு ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை என அடித்து கூறுகிறார். இதை வைத்து பார்க்கும் போது கூடிய விரைவில் அர்ச்சனா ஸ்மால் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படத்தை அடித்து தூக்கிய விஜய்யின் லியோ.. வசூலில் புதிய சாதனை படைத்து அசத்தல்!!