பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்த நிலையில் தற்போது வரை சண்டை சச்சரவுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று நடந்து முடிந்த உன்னை போல் ஒருவன் டாஸ்க்கில் எல்லா போட்டியாளர்களும் சிறப்பாக விளையாடினர். இதனை தொடர்ந்து இன்று விசித்திராவுக்கும் நிக்சனுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் இந்த வாரம் சிறப்பாக பங்கேற்காத ஒர்ஸ்ட் போட்டியாளர்கள் யார் யார் என தேர்வு செய்து சொல்லுங்கள் பிக்பாஸ் கூறியுள்ளார். அதற்கு எல்லா போட்டியாளர்களும் சேர்ந்து விசித்திரா மற்றும் அர்ச்சனாவை கூறுகின்றனர். அதற்கு இனிமேல் என்னோட ஆட்டத்தை பார்க்க போகிறீர்கள் என்று விசித்திரா கூறும் விதமாக இரண்டாம் ப்ரோமோ அமைந்துள்ளது.
View this post on Instagram