‘என்னோட மனைவி இப்படி பட்டவங்க தான்.., அதனால் பார்த்து தான் பண்ணனும்’ – பிக் பாஸ் ராஜு ஓபன் டாக்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ராஜு தனது மனைவி கொடுக்கப்போகும் பரிசு பற்றி கூறியுள்ளார்.

நடிகர் ராஜூ ஜெயமோகன்:

பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரபலமான விஜய் டிவியில் வெளியான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். அடுத்ததாக ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி ஆகிய தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் அதன் பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருந்தார்.

மேலும் அதே நேரத்தில் விஜய் டிவியின் பிரமாண்ட ஷோவான பிக் பாஸ் சீசன் 5 இல் இருந்து அழைப்பு வந்தது. எனவே அதில் கலந்து கொண்டு 106 நாட்கள் வீட்டில் இருந்து வெற்றி கோப்பையையும் தட்டி சென்று விட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பரிசு தொகையாக ரூபாய் 50 லட்சம் மட்டும் இல்லாமல் 106 நாட்கள் இருந்ததற்கான தொகை என மொத்தமாக ரூ. 70 லட்சம் பணத்தை கொண்டு சென்று உள்ளார். அதில் 30 சதவீதம் ஜி எஸ் டி போக மீதி பணத்தை ராஜு வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார்.

இந்த நிலையில் தற்போது ஒரு சில பேட்டிகளில் கலந்து கொண்ட ராஜுவிடம் உங்கள் மனைவிக்கு என்ன பரிசு வாங்கி கொடுத்தீர்கள் என்று கேட்ட போது, அவர் எதையும் அவ்வளவாக விரும்ப மாட்டாள்., எளிமையானவள் என்றும், நன்கு யோசித்து தான் அவருக்கு எதுவும் வாங்கி தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here