Bigg Boss நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1000 கோடி சம்பளம் .. விளக்கம் கொடுத்த நடிகர்!!

0

மக்கள் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான, பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1000 கோடி சம்பளம், தொகுப்பாளருக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss நிகழ்ச்சி:

இந்தியாவில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முதன்முதலாக இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, பின்பு பல மொழிகளில் பல சேனல்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் மட்டுமே முடிந்துள்ளன. ஆனால் இந்தியில் இதுவரை 15 சீசன்கள் முடிந்து விட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த சீசன்களையெல்லாம் தொகுத்து வழங்கியது பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான். இதையடுத்து 16வது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்குகிறார். மேலும் பிக்பாஸ் 16 நிகழ்ச்சிக்காக , சல்மான் கானுக்கு ரூ. 1000 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பள விவரம் குறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

நான் அதை பாக்குறவன் கிடையாது, என்ன நெனச்சாலும் எனக்கு கவலை இல்ல .., முக்கிய பிரபலத்தை வெளுத்து வாங்கும் கெளதம்!!

அதாவது, நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக, ரூ. 1000 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் அனைத்தும் பொய்யானது. எனக்கும் இவ்வளவு சம்பளம் கிடைத்தால் நான் இனி வேலையே பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது, மேலும் பல முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக, டிவி சேனலில் தெரிவித்திருக்கிறேன். இருப்பினும் அவர்களுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேறு யாரும் செட் ஆகவில்லை. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை, தன்னுடைய அம்மா பார்ப்பதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here