பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மற்றும் சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்ததற்கு பிறகு இந்த ஷோவை பற்றியான பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தினேஷ் மற்றும் விசித்ரா பேசுகின்றனர். அதாவது தான் ஜோதிகாவின் கல்வியை பற்றி குறை கூறவில்லை. நான் எதார்த்தமாக பேசியதை ஜோதிகா தவறாக எடுத்துக் கொண்டார் என்கிறார்.

அதற்கு தினேஷ் ஜோவிகா கூறியதை நீங்கள் கவனித்தீர்களா, அவருடைய கேம்மை, அவர் விளையாடுவதற்கு நீங்கள் தடையாக இருக்கிறீர்களாம் என விசித்ராவிடம் கூறுகிறார். அதை கேட்ட விசித்ரா அவர் அப்படி சொல்லியது தவறில்லை. ஏனென்றால் அவர் டாக்சிக் நபர்களுடன் தான் உறவு வைத்திருக்கிறார். அவர்களுடன் இவர் இருக்கும் வரை அவருக்கு இப்படி தவறான எண்ணம் தான் தோன்றும் என விசித்ரா தினேஷிடம் கூறுவது போன்று இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.