
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா மற்றும் தினேஷ் மாஸ் காட்டி வருகின்றனர். அதாவது நியாயம் இல்லாத காரணத்தை சொல்லி பிரதீப்பை பிக் பாஸ் வீட்டார் வெளியேற்றி விட்டனர் என கூறி வாக்குவாதம் செய்து வந்தனர். இப்படி இருக்கையில் தற்போது இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் கொடுத்திருக்கும் நியூ டாஸ்க் பற்றி ரவீனா விவரிக்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது டிவியில் பல்வேறு ஸ்டேட்மெண்டுகள் காட்டப்படும். அதில் திரையிடபடும் ஸ்டேட்மெண்டை எந்த ஹவ்ஸ்மேட் பேசினாரோ, அதை அனைவரின் முன்னர் ஒப்புக்கொண்டு அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். அதன் படி வினுஷாவை உருவ கேலி செய்து நிக்சன் பேசியது திரையிடப்பட்டது. அதற்கு மன்னிப்பு கேட்ட நிக்சன், நான் தவறான நோக்கத்தில் அப்படி பேசவில்லை என கூறுகிறார். அதைக்கேட்டு முகத்தை உம்முன்னு வைத்திருந்த அர்ச்சனாவை பார்த்த நிக்சன், இப்படி எல்லாம் மூஞ்சிய வச்சுக்காதீங்க பார்த்தாலே கடுப்பாகுது என கூறுகிறார்.