
பிக் பாஸ் சீசன் 7 ன் இந்த வார கேப்டனாக பதவி ஏற்றிருக்கும் மாயா ஸ்மால் பாஸ் வீட்டாரிடம் பாரபட்சமாக நடந்து வருகிறார். இதுபோக நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டாரிடம் சில நியாயமான விஷயங்களுக்காக அர்ச்சனா மல்லுக்கட்டி இருந்தார். இப்படி இருக்கையில் இதன் நியூ ப்ரோமோ வந்துள்ளது. அதில் மாயாவிடம் விசித்ரா மற்றும் அர்ச்சனா தங்களது டூத் பிரஷ்ஷை தரும் படி கேட்கின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதை காதில் வாங்காத மாயா டீ போடுங்க என கூறுகிறார். இதன் பிறகு மீண்டும் விசித்ராவுக்கு டூத் பிரஷ்ஷை தரும் படி மாயாவிடம் தினேஷ் கேட்கிறார். அதற்கு மாயா, கை இருக்குதுல்ல அதில் பல் துலக்க சொல்லுங்க என கூறுகிறார். இதை கேட்டு கோபமடைந்த அர்ச்சனா மற்றும் விசித்ரா இருவரும் கார்டனில் வந்து அமர்ந்துள்ளனர். மேலும் கேப்டன் மாயா பாரபட்சமாக நடந்து கொள்வதாக அர்ச்சனா கூறுகிறார். அதற்கு ஆமாம், அப்படித்தான் என மாயா கூறுகிறார்.
வீடு தேடி வந்த PA.., சிக்கலில் மாட்டிய ரோகிணி.., உண்மை உடையும் தருணம்.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!