விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் நம்பர் 1 இடத்தில் இருந்து வரும் ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இதுவரை இந்த சீசனில் 5 பேர் எலிமினேட்டான நிலையில், இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று அர்ச்சனாவுக்கு விசித்திராவுக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், விசித்திரா ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் விதமாக முதல் இரண்டு ப்ரோமோ இருந்த நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதில் விசித்திராவை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு வாருங்கள் என்று தினேஷ் மற்றும் ப்ராவோ அழைத்ததற்கு, நீங்கள் யார் எனக்கு என்று முகத்தில் அடித்த மாதிரி விசித்திரா பேசியுள்ளார். இதனை தொடர்ந்து அர்ச்சனா விசித்திராவிடம் மன்னிப்பு கேட்ட நிலையில், நான் அடுத்த 2 நாளைக்கு வேலை பார்க்க மாட்டேன் என்றும் மெண்டல் டார்ச்சர் தருவதாகவும் கூறியுள்ளார். இதை கேட்ட அர்ச்சனா அழுது கொண்டே பாத்ரூம் பக்கம் செல்லும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.
பிக்பாஸ் கொடுத்த புது டாஸ்க்.., வீட்டை விட்டு வெளியேறிய விசித்திரா.., ப்ரோமோ இதோ!!