இதுவரை இல்லாத விதமாக பயங்கரமான செட்டப்பில் பிக் பாஸ் சீசன் 6 – இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

0
இதுவரை இல்லாத விதமாக பயங்கரமான செட்டப்பில் பிக் பாஸ் சீசன் 6 - இணையத்தில் கசிந்த புகைப்படம்!!
இதுவரை இல்லாத விதமாக பயங்கரமான செட்டப்பில் பிக் பாஸ் சீசன் 6 - இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்த மேலும் சில சுவாரசிய தகவல் லீக்காகியுள்ளது.

சீசன் 6 செட்

விஜய் டிவியில், டாப் டக்கர் நிகழ்ச்சியாக வலம் வரும் “பிக் பாஸ்” ஷோவிற்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2017 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் முடிந்து விட்ட நிலையில், சீசன் 6 ஐ எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டு இருந்தனர். மேலும் இந்த சீசனுக்கான ப்ரோமோவையும் விஜய் டிவி வெளியிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சீசனில், புது முயற்சியாக சாதாரண மக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனையும் உலக நாயகன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாக பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை கமல் தான் கொடுத்து வருகிறார். இதையடுத்து சீசன் 6 கான போட்டியாளர்களையும் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Big Boss 6 : இந்த செல்லத்துக்கு ஒரு சீட்ட போட்டுங்க., வர்றது கன்பார்ம்? முக்கிய பிரபலம் உறுதி!!

சில பிரபலங்களின் பெயர்கள் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது. மேலும் பிக் பாஸ் ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீடு வித்தியாச வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த வகையில் சீசன் 6 க்கான வீடு “காடு” போன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள், நிகழ்ச்சி மீது அதிக எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here