ரச்சிதாவிடம் அத்துமீறும் ராபர்ட்.,, கோபத்தில் நடிகையின் முன்னாள் கணவர்!! பிக்பாஸ் சீசன் 6 அப்டேட்!!

0
ரச்சிதாவிடம் அத்துமீறும் ராபர்ட்.,, கோபத்தில் நடிகையின் முன்னாள் கணவர்!! பிக்பாஸ் சீசன் 6 அப்டேட்!!
ரச்சிதாவிடம் அத்துமீறும் ராபர்ட்.,, கோபத்தில் நடிகையின் முன்னாள் கணவர்!! பிக்பாஸ் சீசன் 6 அப்டேட்!!

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 மிகவும் விறுவிறுப்பாக போய்கொண்டு இருக்கிறது . இதில் ராபர்ட், ரச்சிதாவிடம் நடந்து கொள்ளும் விதம் தான் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ராபர்ட்- ரச்சிதா

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி ஒரு மாதத்தை கடந்து உள்ளது. இந்த சீசனில் சீரியல் நடிகை ரச்சிதா போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார். இவர் விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். மேலும் இவர் அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் பிக் வீட்டில் சக போட்டியாளராக கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர்  ரச்சிதாவிடம் தகாத முறையில் நடந்து கொள்வதால் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் ரச்சிதாவை சைட் அடித்து வருகிறார். அவர் எங்கு போனாலும் அவரை பின் தொடர்வது, அவரை உற்று உற்று பார்ப்பது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் ரச்சிதா அதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய விளையாட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதை தொடர்ந்து ரச்சிதா, ராபர்டை அண்ணனாக பார்ப்பதாக சொல்லியும், அவர் ரச்சிதாவை crush என்று சொல்லிக்கொண்டு  இருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் இவர் சேட்டைக்கு ஒரு அளவே இல்லையா என்று இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ராபர்டின் இந்த செயலால் ரச்சிதா கணவர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து ரச்சிதாவிற்கு சப்போர்ட் செய்து கொண்டு தினேஷ் இந்த விஷயத்தில் களம் இறங்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் விரைவில் ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு எண்டு கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியில் அனுப்பப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here