
பிக் பாஸ் வீட்டில் இப்பொழுது பேக்கரி டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்து வருகிறது. அதாவது நேற்று மணிகண்டன் மற்றும் தனலட்சுமி இடையே பெரிய சண்டை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காலையில் வெளியான ப்ரோமோவில் ஏடிகே மற்றும் ஜனனி இடையே சண்டை ஏற்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பிக் பாஸ் ஸ்டார்ட் ஆகி 3வது வாரத்திலேயே இப்படி ஹவுஸ் மேட்ஸ் மல்லுக்கட்டி கொள்வது பெரிய ஷாக் தான். மேலும் பிரச்சனை வேண்டாம் என்று சில contestants அடங்கி போய்விட்டனர். இந்நிலையில் இப்பொழுது வெளியான ப்ரோமோவிலும் சண்டையுடன் கலந்த சூட்சமம் வெளியாகியுள்ளது. அதாவது அசிம் பொருளை எடுக்க மும்முரமாக இருக்கிறாரே தவிர எடுக்கவே இல்லை.
முதல் நாள் ஷூட்டிங் சென்ற ஆலியா மானசா.., புது பொலிவுடன் மீண்டும் தொடங்கிய அதிரடி வேட்டை!!
தனம் அதற்கு சத்தம் போட்டும் சொல்கிறார். ஆனால் அசிம் அதை எடுக்க முனைப்பாக இருப்பதாகவே தெரியவில்லை. இதனால் தனம் இவரை அனுப்புனது தான் பெரிய தப்பு என்பது போல சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் மணிகண்டனிடமும் இதனை பற்றி விசாரிக்கிறார். மறுபடியும் அசிம் மற்றும் தனம் இடையே மீண்டும் எதோ பிரச்சனை வெடிக்க உள்ளது மட்டும் தெரிகிறது.