பிக் பாஸ் வீட்டில் முற்றிய சண்டை.., குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி!!

0
பிக் பாஸ் வீட்டில் முற்றிய சண்டை.., குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி!!
பிக் பாஸ் வீட்டில் முற்றிய சண்டை.., குயின்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜனனி!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை பிரச்சனைகளுடன் மட்டுமே ஓடி கொண்டுள்ளது. அசிம் ஆரம்பத்தில் ஏடாகூடமாக நடந்து கொண்டாலும் இப்பொழுது கொஞ்சம் நியாயமாகவே நடந்து கொள்கிறார்.

ஆனால் மகேஸ்வரி நடந்து கொள்ளும் விதம் தான் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. அதாவது மகேஸ்வரி ஆரம்பத்தில் அசிமுக்கு சப்போர்ட்டாக பேசி வந்தார். எப்பொழுது கமல் சார் வந்து அசிமை கண்டித்தாரோ அப்பொழுதே அவருக்கு எதிராக மாறி விட்டார். முதல் ப்ரோமோவில் பல அதிரடியான வாக்குவாதங்களை பார்த்திருந்தோம். இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோ அதை விட சூடுபிடித்துள்ளது.

அதாவது குயின்சிக்கும் ஜனனிக்கு இடையே எதோ வாக்குவாதம் நடைபெறுகிறது. குயின்சி தனது டவலை அம்மா கூட தொட்டது கிடையாது என்று சொல்கிறார். ஜனனி அதற்கு வந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனாலும் குவின்சி விடாமல் பேசி கொண்டிருக்க கோவமடையும் ஜனனி அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இனிமேல் இந்த மாதிரி நடக்காது என்றும் கூறுகிறார். இந்த ப்ரோமோ இப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here