
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டைகள் மட்டுமே தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல பிக் பாஸ் கடினமான டாஸ்க்கையும் கொடுத்து வருகிறார். வாரா வாரம் தனலட்சுமி, மகேஸ்வரி, அசிம் இடையே தான் தொடர்ந்து சண்டைகள் நடந்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சரி சண்டைகள் ஒரு பக்கம் இருக்கிறது என்றால் இன்னொரு பக்கம் லவ் டிராக். ரக்ஷிதா பின்னால் ராபர்ட் மாஸ்டர் சுற்றி கொண்டுள்ளார். ரக்ஷிதா எங்கு சென்றாலும் சரி, என்ன செஞ்சாலும் சரி ராபர்ட் மாஸ்டரோட கண்ணு அங்க தான் இருக்கும். நேற்று ரக்ஷிதாவின் கணவர் கூட stand for rakshitha என்று போஸ்ட் செய்திருந்தார்.
இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரின் கொட்டத்தை அடக்கும் வகையில் ரக்ஷிதாவின் கணவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்க போகிறாரா?? அல்லது 70 வது நாளில் உறவினர்கள் வருகை அன்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து ஷாக் கொடுக்க போகிறாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.