BIGG BOSS சீசன் 6 இனிமேல் இப்படி தான்.,, வெளியான ஸ்பெஷல் அப்டேட் இதோ!!

0

ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் விஜய் டிவி முன்னணியில் உள்ளது. அந்த வகையில் “பிக்பாஸ் சீசன் 6” விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் அப்டேட் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

BIGG BOSS சீசன் 6:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அண்மையில் நிறைவடைந்துவிட்டது. அந்த சீசனில்,ராஜூ ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா தேஷ்பாண்டே ரன்னராகவும் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இதையடுத்து பிக்பாஸ் சீசன் 6 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பிக் பாஸ் சீசன் 6க்கான புரோமோக்கள் டிவியில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக பிரபலங்கள் மட்டுமல்லாது யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிக் பாஸ் சீசன் 6 “அக்டோபர் 2” தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சீசனுக்கான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நிறைவு பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பாக, ‘பிக் பாஸ் சீசன் 6’ ஒரே நேரத்தில் டிவியிலும் OTT யிலும் ஒளிபரப்பாகப் போகிற‌து. அதாவது தினமும் டிவியில் 1 மணி நேரமும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேர ஒளிபரப்பாகவும் உள்ளது. மேலும் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here