பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரபலங்கள் – இணையத்தில் ட்ரெண்டாகும் லிஸ்ட்!!

0
bigg boss

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் தற்போது அதில் கலந்துகொள்பவர்களின் பட்டியல் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளது.

பிக் பாஸ்

ஒரே வீட்டில் 16 பிரபலங்கள் 100 நாட்கள் என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தது. முதல் சீசனில் இருந்து தற்போதுநடந்து முடிந்த 4 வது சீசன் வரை அனைத்தும் பிரபலமடைந்தது. ஒவ்வொரு சீசனிலும் எதாவது ஒரு போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் இடத்தை பிடிப்பர். மேலும் மக்களின் பொழுதுபோக்கே இந்த நிகழ்ச்சியில் நடக்கும் சண்டை தான்.

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த சண்டைக்கு மட்டுமே பஞ்சமில்லாமல் இருந்தது. தற்போது நடந்து முடிந்த சீசன் கொரோனா காரணமாக தாமதமாக எடுக்கப்பட்டது. அதாவது ஜூன் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட இருந்ததை அக்டோபர் மாதத்தில் தொடங்கினர். ஆனால் இப்பொழுது சீசன் 5 ஐ ஜூன் மாதத்திலேயே தொடங்க இருப்பதாக தகவல் வெளியானவண்ணம் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த வகையில் குக் வித் கோமாளி கனி, அஸ்வின் போன்றோர் கலந்துகொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நகுல், லைலா மற்றும் மஹேந்திரன் ஆகியோர் கலந்துகொள்வதாகவும் இணையத்தில் செய்திகள் பரவலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here