பிரபல விஜய் டிவி நடிகரை லாவகமாக தூக்கிய பிக் பாஸ்.. கழுத்தை கெட்டா குட்டி சுவரு!!

0

சின்னத்திரை ரசிகர்கள் ஆவலோடு பார்க்க காத்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் திருநங்கை மிலா, பவானி ரெட்டி, இமான் அண்ணாச்சி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர்களை விட மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளனராம். ஏனெனில் இதுவரை ஹிட் அடித்த சீசன் 1, சீசன் 3 இல் பெரும்பாலும் மாடல்களே பங்கேற்றனர்.

ஆனால் தற்போது ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் டிவி-யில் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ளாராம். என்னதான் மாடல்களை தேர்ந்தெடுத்தாலும் விஜய் டிவி மீண்டும் நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here