பிக் பாஸ் 5 கலந்துகொள்ளும் கோலி சோடா நடிகர் – அப்போ இந்த சீசன்லயும் லவ்வுக்கு பஞ்சம் இருக்காது!!

0

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பற்றிய அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் அதில் கலந்து கொள்ள இருப்பவர்கள் பற்றிய செய்தியும் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்தே அதிக பிரபலமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. ஒரே வீட்டில் 15 போட்டியாளர்கள் 100 நாட்கள் இருந்து எப்படி விளையாட போகிறார்கள் என்பது தான் கான்செப்ட். முதல் சீசன் தான் இந்த நிகழ்ச்சி பற்றிய ஆர்வத்தை தூண்டி விட்டது.

ஏனெனில் இந்த நிகழ்ச்சி பற்றிய சிறு ஐடியா கூட மக்களுக்கு இல்லை. ஆனால் ஆரம்பித்த நாளிலேயே சண்டை தான். அதுவும் ஓவியா, ஜூலி இடையே ஏற்பட்ட பிரச்சனை பலரையும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்தது. அடுத்தடுத்த சீசன்களும் இதே பிரச்னையோடு இருக்க சீசன் முழுக்க செம ஹிட் தான்.

இந்நிலையில் அடுத்த சீசனுக்காக எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. அடுத்த சீசனில் யார் கலந்துகொள்ள போகிறார்கள், எப்பொழுது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கோலி சோடா 2 படத்தில் சிவா கதாபாத்திரத்தில் நடித்த வினோத் கேசவன் தான் இந்த 5வது சீசனில் கலந்துகொள்ளவுள்ளாராம். மேலும் பிரபல நடிகையான லைலா, குக் வித் கோமாளி பாலா போன்றோரும் கலந்துகொள்ள இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here