பிக் பாஸ் போட்டியாளர்கள் இரண்டு பேருக்கு கொரோனா – வெளியான தகவல்!!

0
bigg boss season 4

பிக் பாஸில் முதல் மூன்று சீசன்கள் எந்த சிக்கலும் இன்றி வெற்றிநடை போட்ட நிலையில் 2020ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன்-4 இல் தொடர்ந்து பல இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ்

2017 இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் விரும்பி பார்க்க கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் தனது தனிப்பட்ட குணநலன்களால் மக்கள் மனதில் இடம் பிடித்தனர். இதில் கலந்துகொண்ட ஓவியா, லாஸ்லியா, முகேன் என பலர் பிரபலமடைந்ததை நம்மால் கண்கூடாக பார்க்க முடிந்தது. பலரும் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

bigg boss season 4
bigg boss season 4

கடந்த மூன்று சீசன்களும் வெற்றிநடை போட்ட நிலையில் இந்த 4வது சீசன் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் பிக் பாஸ் குறித்த செய்திகள் நாளுக்கு நாள் வெளியான வண்ணம் உள்ளன.

bigg boss season 4
bigg boss season 4

விஜய் டிவி 2 ப்ரோமோக்களை வெளியிட்டது. அதில் சமூக இடைவெளி பற்றியும், கொரோனா முன்னெச்சரிக்கை பற்றியும் கூறப்பட்டிருந்தது. ஆனால் எப்பொழுது ஒளிபரப்பாகும் என்று இன்னும் அறிவிக்கப்பட்டவில்லை.

bigg boss season 4
bigg boss season 4

இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெயர் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் 90% தேர்தெடுக்கப்பட்ட நிலையில் அதில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாம்.

bigg boss season 4
bigg boss season 4

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த நான்காவது சீசன் பல தடங்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் இந்த சீசன் தாமதமாகுமா?? அல்லது விரைவில் ஒளிபரப்பாகுமா?? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here