முன்னணி நடிகர் படத்தில் கமிட் ஆன பிக் பாஸ் சம்யுக்தா – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

மாடலிங் துறையில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமானவர் சம்யுக்தா. தற்போது போன வாரம் எவிக்ஷனில் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தாவிற்கு விஜய் சேதுபதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.

சம்யுக்தா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா. இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று தான். ஆனாலும் இவர் நடந்துகொண்ட விதம் பலரையும் கோவப்படுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறினார். ஆரம்பத்தில் அமைதியாகவும், அனைவரிடமும் அன்புடன் இருந்து வந்த சம்யுக்தா நாளடைவில் உண்மையான குணத்தையே காட்ட ஆரம்பித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சனம் ஷெட்டிக்கும் இவருக்கும் நிறைய பிரச்சனைகள் வீட்டில் ஏற்பட்டது. ஆரிக்கும் இவருக்கும் இடையில் கூட பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அவர் அடிக்கடி வளர்ப்பு அப்படி என்ற வார்த்தையை வேறு பயன்படுத்தி பல சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அவர் வெளியேறுவதற்கு அந்த வாரத்தில் கூட சனம் ஷெட்டியை கலீஜ் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவமதித்தார். இதனை கமல் சுட்டிக் காட்டி அவரை கண்டிக்கவும் செய்தார். சம்யுக்தா வெளியேறியது பலரையும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது. இது மக்களின் தீர்ப்பாக இருந்தாலும் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தது.

ஜெய் & அஞ்சலி பிரேக்கப்புக்கு இந்த நடிகை தான் காரணமாம்!!

ஆனால் சம்யுக்தாவும் இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டார். வெளியே வந்த சம்யுக்தாவிற்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவருக்கு படவாய்ய்பு கிடைத்துள்ளது. விஜய்சேதுபதி நடிக்கும் துக்லக் படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் அந்த படத்தில் நடிக்கவே ஆரம்பித்து விட்டாராம் சம்யுக்தா. இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here