கடந்த வாரம் நடந்த பிக்பாஸ் ஜோடிகள் 2 கிராண்ட் பினாலேவில் தொகுப்பாளர் ராஜு சென்னை வாசிகளை இழிவாக பேசியதற்கு தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தொகுப்பாளர் ராஜு:
சின்னத்திரையில் தனக்கு கிடைத்த பலவித கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் ராஜு. இவர் தனது திறமையை வெளி காட்டுவதற்கு எல்லா ரியாலிட்டி நிகழ்ச்சிக்கும் ஏறி இறங்கியுள்ளார். அதன் பிறகு சின்ன திரையில் வாய்ப்பு கிடைத்தாலும் மக்களிடம் முழுவதுமாக வரவேற்பு கிடைக்கவில்லை.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
ஆனால் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5வில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பேராதரவு பெற்று அந்த ஷோவின் டைட்டில் வின்னரானார். அதனை தொடர்ந்து ராஜு வீட்ல பார்டி, பிக்பாஸ் ஜோடிகள் 2 போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் நடந்த பிக்பாஸ் ஜோடிகள் 2-வின் கிராண்ட் பினாலே நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பாலிவுட் பிரபலம் ரன்பீர் கபூர், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, பிரபல இயக்குனர் ராஜமௌலி கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் ரன்பீர் கபூருக்கு தமிழை கற்று தருவதன் பெயரில் சென்னை மற்றும் மதுரை மக்களை ராஜீ அசிங்கப்படுத்தும் பாணியில் பேசினார்.
அதாவது, மதுரை காரங்க பேசுறது குடிச்சுட்டு பேசுற மாதிரியும், சென்னை காரங்க பேசும் போது மூஞ்சி கோபமாக இருக்குற மாதிரியும் பேசுவாங்க என்று கூறியுள்ளார். இது குறித்து நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். மேலும் இதற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கையெடுத்துக் கும்பிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.