விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 ஒரு மாதத்தை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சந்து பொந்துக்குள்ள மாட்டிக்காத என்ற டாஸ்க் நடைபெற்றுள்ளது. இந்த டாஸ்க்கில் ஸ்மால் பாஸ் வீட்டாரும், பிக்பாஸ் வீட்டாரும் தனித்தனியாக விளையாடியுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் ஸ்மால் பாஸ் வீட்டில் அர்ச்சனாவை தேர்ந்தெடுக்கவில்லை என்று மற்ற போட்டியாளர்களிடம் கேட்க, விசித்திராவுக்கும் அர்ச்சனாவுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து உச்சகட்ட கோபத்தில் சென்ற விசித்திரா கிச்சன் ரூமில் இருந்து எகிறி குதித்து பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.