பிக் பாஸ் வீட்டில் இருந்து நமீதா வெளியேற காரணம் இவர்கள் தானா? – இணையத்தில் உலா வரும் தகவல்!!

0

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு பின் கடந்த வாரம் அக்டோபர் 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதில் திருநங்கை நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார். சென்ற வாரம் பிக் பாஸ் அளித்த கடந்து வந்த பாதை டாஸ்க்கில் நமீதா தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை கூறி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தார்.

ரசிகர்கள் பலரும் நமீதா தான் வெற்றியாளராக வேண்டும் என்றும் ஆசைப்பட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக நமீதா திடிரென்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவர் வெளியேறியதற்கான சரியான காரணம் வெளிவராத நிலையில் இணையத்தில் தாமரை, பிரியங்கா இருவரும் எப்படி ஆண்களை மயக்குவது என நமீதாவிடம் கேட்டதாகவும் இதனால் கோபப்பட்ட நமீதா தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பொருட்களை உடைத்ததால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆனால் இதற்கு நமீதா ஆதரவாளர்கள் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் தான் நமீதா வெளியேறினார். இது முற்றிலும் தவறான கருத்து. இது போன்ற தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்காதீர்கள் என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here