கவினுக்கு விரைவில் திருமணம் – அப்போ லாஸ்லியாவோட நிலைமை?? ரசிகர்கள் ஷாக்!!

0

பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் கவின். இவருக்கு லாஸ்லியாவிற்கும் காதல் இருப்பதாக பேசி வந்த நிலையில் தற்போது கவின் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

பிக் பாஸ் கவின்

விஜய் டிவி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது என்றே சொல்லாம். விஜய் டிவியில் அறிமுகமான பலரும் சாதித்து வருகின்றனர். கவினும் விஜய் டிவியின் மூலம் அறிமுகமானவர் தான். பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் கவின். இவருக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனாலும் அவரை தூக்கி நிறுத்தியது என்னவோ சரவணன் மீனாட்சி சீரியல் தான். ஆரம்பத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து, திடீரென ஹீரோ மாறியதால் கவின் அந்த சீரியலின் ஹீரோவானார். ஒரு சீரியலில் நாயகன் மாறினால் மக்கள் ஏற்றுக்கொள்வது கஷ்டம். ஆனால் கவினின் நடிப்பும், அழகும் மக்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் வேட்டையன் என்பதே கவினின் அடையாளமாக மாறியது. அந்த சீரியலில் அவரது குறும்புத்தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அந்த சீரியல் டாப் ரேட்டிங்கில் போனது. அந்த சீரியல் முடிந்த பிறகு அவர் படத்தில் நடிக்க சென்றுவிட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெள்ளித்திரை அவருக்கு கைகொடுக்கவில்லை.

பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கும் VJ மகேஸ்வரி!!

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு நடந்தது தான் நமக்கே தெரியுமே. அவர் வேற எதோ செய்ய போக அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. மேலும் லாஸ்லியாவும் கவினும் காதலித்தும் வந்தனர். கவிலியா என்று ஒரு ஆர்மியே உருவானது. இந்நிலையில் பிக் பாஸ் முடிந்த பிறகு இவர்கள் பேசிக்கொள்ளவும் இல்லை, காதலிப்பதாகவும் தெரியவில்லை.

ஆனால் வலைத்தளங்களில் கவின் தான் லாஸ்லியாவை கழட்டிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிறது. இதற்கு அவர்கள் மறுப்பும் தெரிவிக்கவில்லை. இப்பொழுது கவின் ஸ்டைலிஸ்ட் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் மணம் முடிக்க போவதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி வருகின்றனர். ஆனால் இந்த செய்திகள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here