கதாநாயகனுக்கான 10 பொருத்தத்துடன் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் கவின் – என்ன ஒரு அழகு பாருங்களே!!

0

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் வேட்டையனாக பதிந்த கவின் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

கவின்

கனாக்காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் கவின். அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். ரக்ஷிதாவிற்கும் கவினுக்கும் ஜோடி பொருத்தம் ஒத்து போக சீரியல் வேற லெவெலில் பிரபலமானது.

இந்நிலையில் தான் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டே சென்றது. அதை வைத்தே அவர் வெள்ளிதிரையில் கால் பதித்தார். நட்புன்னா என்னனு தெரியுமா?? படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். அதன் பிறகு தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதன் பிறகு தான் அவருக்கு பிரச்சனை ஆரம்பித்தது. ஆரம்ப கட்டத்தில் நல்லபடியாக சென்றிருந்தாலும் அடுத்தடுத்து சாக்ஷியால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் லாஸ்லியாவிற்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட அதுவும் ஒரு பிரச்சனையாக மாறியது.

தற்போது இருவருமே பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். கவினின் லிப்ட், டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைக்கு வர காத்து கொண்டுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கவின் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முன்பை விட ரொம்பவே அழகாகி விட்டார் கவின். நாளு நாள் இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here