முழுக்க முழுக்க ஹீரோயினாக அவதாரம் எடுக்கும் பிக் பாஸ் ஜூலி.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

0

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்த்தில் பங்கு பெற்று பேசிய பன்ச் டயலாக்குகளால் வீர தமிழச்சி என்று புகழ் பெற்றவர் ஜூலி. அதில் கிடைத்த வாய்ப்பால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மக்கள் மத்தியில் ஜூலிக்கு இருந்த ஆதரவு பின்னர் சக போட்டியாளர்களை பற்றி புறம் பேசியதாலும் ஓவியாவை தேவை இல்லாமல் வம்பு இழுத்தத்தாலும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் மக்கள் ஜூலியை முழுவதுமாக வெறுக்க ஆரம்பித்தனர்.

அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் இவரை இணையத்தில் ட்ரோல் செய்வதை நெட்டிசன்ஸ் ஒரு வேலையாக வைத்து இருந்தனர். ஆனால் ஜூலி அதை பற்றி கண்டுகொள்ளாமல் தன் கேரியரில் கவனம் செலுத்தி சின்ன திரையில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார் . பின்னர் இவருக்கு சில படவாய்ப்புகள் வந்தது.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார். இன்ஸ்டாவில் தன் போட்டோக்களையும் வீடியோக்களையும் அதிகம் பகிரும் பழக்கம் உள்ளவர் ஜூலி. தற்போது சிம்பிள் மேக்கப்பில் ஹீரோயின் அளவுக்கு ஜூலி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here