ஒரே பாட்டில் ஒன்று கூடிய பிக் பாஸ் பிரபலங்கள் – வைரலாகும் வீடியோ!!

1

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி தற்போது வரை ட்ரெண்டில் இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். தற்போது 3 பிக் பாஸ் சீசன் போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அந்த வீடியோ காட்டுத்தீ போல பரவி வருகிறது.

பிக் பாஸ்

விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி விட்டது என்றால் அது பிக் பாஸ் தான். 15 போட்டியாளர்களை 100 நாட்கள் வீட்டுக்குளேயே வைத்திருந்து பல டாஸ்குகளை கொடுத்து அதனை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே ட்விஸ்ட். இதனால் வீட்டில் பல சண்டைகள் ஏற்படும். மேலும் பல பிரச்சனைகளும் ஏற்பட்டது. மூன்றாவது சீசனில் மதுமிதா கையை அறுத்துக்கொண்டு வீட்டை விட்டே வெளியேறினார். இப்பொழுது அவரை அவர் என்ன செய்கிறார் என்பதும் தெரியவில்லை.

இப்படி நெகடிவாக இருந்தாலும் பலரும் தூக்கி விட்ட நிகழ்ச்சியும் இதுதான். ஏனெனில் ஓவியா, ஆரவ், முகேன் என பலரும் தற்போது ஜொலித்து கொண்டுள்ளனர். ஏனெனில் இவர்களின் உண்மையான குணம் அனைவர்க்கும் பிடித்து போகவே இவர்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். தற்போது முகேன் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். ஆரி மக்களின் நாயகனாக உருவெடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு?? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!!

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்துகொண்டவர்கள் பலரும் தங்களது கேரியரில் சிறந்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2,3,4 இல் கலந்துக்கொண்ட போட்டியாளர்கள் ஒன்றாக ரீலிஸ் செய்துள்ளனர். அதாவது ஷாரிக், சாண்டி மாஸ்டர், சம்யுக்தா போன்றோர் ‘முமுணுக்குற முத்தம்மா மனசில் என்ன சத்தமா’ என்று பாடலுக்கு ரீலிஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விடியோவை காண கிளிக் செய்யவும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here