வனிதா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த அசீம்.., இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!

0
வனிதா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த அசீம்.., இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!
வனிதா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த அசீம்.., இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!

பிக்பாஸ் அசிம் பிக்பாஸ் பிரபலமான வனிதா வீட்டிற்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிக்பாஸ் அசிம்:

சின்னத்திரையில் தோன்றி அனைத்து பெண்களின் மனதை கொள்ளையடித்தவர் சீரியல் நடிகர் அசிம். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டார். அதன் பிறகு எந்த சீரியலில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அவருக்கு பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி அந்த ஷோவில் கலந்து கொண்டது மட்டுமின்றி, தனித்துவமாக விளையாடி டைட்டில் வின்னர் கோப்பையை தட்டி சென்றார் அசிம். மேலும் அதில் வெற்றி பெற்ற 50 லட்சத்தில் பாதி பணத்தை கொரோனாவால் பாதிப்பில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுக்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் அசிம், பிக்பாஸ் சீசன் 2வில் மிகப்பெரிய அளவிற்கு பிரபலமான வனிதா விஜயகுமாரை சந்தித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதுக்காகத்தான் சூர்யகுமார் தேர்வானாரா? வாய்ப்புக்காக ஏங்கும் சர்பராஸ் கான்.., ரெய்னா பளீச் பேட்டி!!!

அதாவது, பிக்பாஸ் சீசன் 6 ல் வெற்றி பெற்ற அசிம், வனிதா விஜயகுமார் வீட்டுக்கு சமீபத்தில் சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதற்கு கேப்ஷனாக நாங்கள் எவருக்கும் எடுத்து காட்டாக இருக்க இங்கு கூட்டம் சேரவில்லை. தவறான வதந்திகளை உடைக்கவே ஒன்றுகூடி உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here