ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி பிக் பாஸ் சீசன் 6 சோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் ஆயிஷா. இந்த பிக் பாஸ் ஷோவில் 63 நாட்கள் இருந்த நிலையில் அதன் பின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதன்பின் இவர் காதலித்து வந்த ஹாரன் ரெட்டி என்பவரை நிச்சயதார்த்தம் செய்ததாகவும் தகவல் வெளியானது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் அந்த திருமணம் பாதியிலே நின்று விட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. மேலும் இவருக்கு சிறு வயதிலேயே இரண்டு திருமணங்கள் முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இப்படி இவர் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருந்தது. தொடர்ந்து சர்ச்சைகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஆயிஷா தற்போது தெலுங்கு சீரியலில் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் ப்ரோமோ கூட சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.