அறுவை சிகிச்சையால் ஆள் அடையாளமே தெரியாமல் உடல் இளைத்த போன அர்ச்சனா – சாரா வெளியிட்ட அதிரடி வீடியோ!!

0

பிரபல தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த அர்ச்சனா தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் வீல்சேரில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அர்ச்சனா

ஜீ தமிழில் தொகுப்பாளராக இருந்து வந்தவர் தான் அர்ச்சனா. ஆரம்பத்தில் இவர் சன் டிவியில் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தான் அவர் ஜீ தமிழுக்கு தாவினார். அங்கு பல நிகழ்ச்சிகளை தனது மகளுடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.

அதன் பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் வந்த நாளில் இருந்து அன்பு என்ற பெயரில் பலரையும் விளையாட விடாமல் செய்தார். அன்பு ஜெயிக்கும் என்ற வாசகத்தை வைத்து அவர் போட்ட ஆட்டம் இருக்கே…, இதனால் ரசிகர்கள் பலரும் கடுப்பானார்கள்.

வீட்டை விட்டு வெளியே வந்த அர்ச்சனா அப்பொழுதும் அடங்காமல் தனது வீட்டு பாத்ரூம் எல்லாம் சுற்றி காட்டுகிறேன் என்று சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக மண்டை ஓட்டில் இருக்கும் பிரச்சனையால் அறுவை சிகிச்சை இவருக்கு செய்யப்பட்டது.

அடுத்து இவரின் உடல்நிலை எப்படி உள்ளது என்று பலரும் விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் சாரா தனது யூடுப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அர்ச்சனா திக்கி திணறி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here