பிக் பாஸ் ஆரவ் நியாபகம் இருக்கா?? இப்போ யாரோட ஜாய்ண்ட் ஆயிருக்காருனு பாருங்க!!

0

பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ், தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கேற்றாற் போல் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் தடையற தாக்க, தடம் போன்ற ரசிகர்களின் விருப்பமான படங்களை இயக்கியவர் இயக்குனர் மகிழ் திருமேனி. தற்போது இவரின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வால் கதா நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

மிஷ்கினின் பிசாசு படத்தை இசையமைத்த அரோல் கரோலி இப்படத்தை இசை அமைக்கிறார். இவர்கள் கூட்டணியில் பிக் பாஸ் சீசன் 1 வெற்றியாளர் ஆரவும் இணையவுள்ளார். பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து மார்கெட் ராஜா எம்பிபிஎஸ், ராஜா பீமா ஆகிய படங்களில் ஆரவ் நடித்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் உடன் ஆரவ் இணைந்திருப்பது ஆரவ் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here