‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ – பிக் பாஸ் பிரபலத்தின் அதிரடி மாற்றம்! ஷாக்கான ரசிகர்கள்!!

0

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமான அறந்தாங்கி நிஷா தற்போது தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சாதனை செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறந்தாங்கி நிஷா

திரையுலகை பொறுத்தவரையில் பெண் காமெடி நடிகர்கள் கொஞ்சம் குறைவு தான். கோவை சரளா, ஊர்வசி, வித்யுலேகா என விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் உள்ளனர். அப்படி இருக்க விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் கால் எடுத்து வைத்தவர் தான் நிஷா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது பேச்சாற்றலால் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரை முன்னேறி இருந்தார் அறந்தாங்கி நிஷா. அதன் பிறகு விஜய் டிவி அவருக்கு நிறைய வாய்ப்புகளை தந்தது.

தொகுப்பாளினியாக, போட்டியாளராக பல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார். தனது குறையையே நிறையாக எடுத்துக்கொண்டு பேச்சாற்றலால் அணிவரையும் கொள்ளை கொண்டார். இப்படி இருக்க இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பாகுபலி அனுஷ்காவிற்கு விரைவில் டும் டும் டும் – மாப்பிள்ளை யார் தெரியுமா??

ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அர்ச்சனா வீட்டில் கால் எடுத்து வைத்த நாளில் இருந்து நிஷா அர்ச்சனா பேச்சை கேட்டு ஆடியதால் அவருக்கு இருந்து ஒரு புகழ் மங்கி தான் போனது. அன்பு என்கின்ற பெயரில் யாரையும் விளையாட விடாமல் செய்திருந்தார். இதனால் நிஷா பாதியிலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இது பலருக்கும் சோகம் தான்.

அடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்து விட்டார் நிஷா. தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடவுள்ளார். அதில் அவர் உடல் எடையை மொத்தமாக குறைத்துள்ளார். இதனை கவனித்த ரசிகர்கள் அவரிடம் டிப்ஸ் கேட்டும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here