நல்லா தானே இருந்தீங்க.. திடீர்னு என்னாச்சு?? கன்னம் காதெல்லாம் ஒட்டி போய் ஆளே மாறிப்போன பிக் பாஸ் பிரபலம்.. 

0

பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் படு ஒல்லியாக கன்னம் காதெல்லாம் ஒட்டி போய் ஆளே மாறிப்போயுள்ளார். இதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் ‘திடீர்னு என்னாச்சு?? ஏன் இப்படி மாறிட்டீங்க??’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழில் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டார். முதல் சீசனில் ஜூலி மக்களின் வெறுப்பை சம்பாதித்தது போலவே இரண்டாவது சீசனில் இவரது செயல்பாடுகளால் மக்களின் கோபத்திற்கு ஆளானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் பொல்லாத உலகில் பயங்கர கேம், அலேகா, கன்னித்தீவு, மிளிர் என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். தற்போது இன்னும் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த வித விதமாக போட்டோ ஷூட் செய்து போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் நடத்திய போட்டோ ஷூட்டில் மிகவும் ஒல்லியாக கன்னம் எல்லாம் வற்றிப்போய் இருக்கிறார். இதற்கு ரசிகர்கள், ‘ஏன் இப்படி ஆயிட்டீங்க?? திடீர்னு உங்களுக்கு என்ன ஆச்சு??’ என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here