‘உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென்ன செய்வாயோ…??’ தன் மனைவியுடன் பிக் பாஸ் ஆரி செய்த ரீல்ஸ்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை கைப்பற்றிய ஆரி அர்ஜுனன் தன் மனைவியுடன் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ஆரி

நெடுஞ்சாலை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் ஆரி. பல சமூக தொண்டுகள் செய்ததன் மூலம் அனைவரின் மத்தியிலும் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பித்த முதல் நாளிலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அவரின் நன்னடத்தைகள் யாவும் மக்களை வெகுவாக கவர்ந்தது. எதிலுமே நேர்மை வேண்டும் என்று ஆரம்பித்தில் இருந்தே அவர் எடுத்துரைத்து கொண்டே இருந்தார். இதனால் வீட்டில் பலருடன் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. அதிலும் அனிதாவுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை ஒரு நாள் பூதாகரமாக வெடித்தது.

இதனால் ஆரிக்கு மேலும் ரசிகர்கள் உருவானார்கள். அனிதாவிற்கு பிறகு பாலாஜிக்கு ஆரிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் இருவரும் ஒரு கட்டத்தில் சமாதானம் ஆகி பாசத்தை காட்ட ஆரம்பித்தனர். நெருங்கிய நண்பர்களும் ஆனார்கள். பாலாஜிக்கு நாளுக்கு நாள் பெண் ரசிகர்கள் அதிகமானார்கள்.

ஆனால் கடைசியில் ஜெயித்தது என்னவோ ஆரி தான். இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மனைவிடம் இணைந்து எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இருவருக்கும் இடையே உள்ள அன்னியோன்யம் அனைவரும் ரசிக்கும் படியாகவும் இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here