உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 இந்த வாரம் காரசாரமாக போய் கொண்டிருக்கிறது. இந்த வாரம் கேப்டனாக இருந்து வரும் மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மீது கடும் வன்மத்தை கக்கி வருகிறார். மேலும் BB கோர்ட் டாஸ்க்கில் மாயாவை வெளுத்து வாங்கிய அர்ச்சனாவை தொடர்ந்து தற்போது நிக்சன் மீது மணி வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது ரவீனாவின் வளர்ச்சிக்கு மணி தடையாக இருக்கிறார் என்று நிக்சன் கூறியுள்ளார்.
அதே போல் ஐஷு வளர்ச்சிக்கு நிக்சன் தடையாக இருக்கிறார் என்று அவர் ஒப்பு கொள்ள வேண்டும் என்று மணி வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது வாதம் நடந்த போது நிக்சன், ரவீனாவுக்கு மணி பாதுகாப்பாக இருக்க என்ன செய்தாரோ, அதை தான் நானும் செய்தேன் என்று நிக்சன் வாதாடினார்.இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த இருவரும் ஒருவொருக்கொருவர் மோதி கொண்டனர். மேலும் பேசிய மணி, ஐஷு என்கிட்ட சொன்னதை வெளியே சொன்னால் நீ காலி என்று மணி கத்தும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.