
விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7, 45 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் உன்னை போல் ஒருவன் டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதில் சில காரசார சண்டைகளும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதில் இந்த வீட்டில் ஆண்களின் பங்களிப்பு அதிகமா இல்லை பெண்களின் பங்களிப்பு அதிகமா என்ற வாக்குவாதம் போய் கொண்டிருக்கிறது. அப்போது ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரமாக இருந்து தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியில் பூர்ணிமா இந்த சீசனோட டைட்டில் வின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன் விக்ரம் தான் என்று கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.